ஜோதிடத்தில் பொது விதி | Astrological General rules | Astro Mani

6 Views
Published
காலதேச வர்த்தமான யுக்தி ச்ருதி ஸ்மிருதி நிறபேதம் என்பதை ஜோதிடத்தில் எவ்வாறு பயன்பாட்டுக்கு வருகிறது என்பதை பார்ப்போம்.

காலம்:
சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாக இடம்பெயர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாத சூரியனுக்கும் தனித்தனியே பெயர்கள் உண்டு. மேலும் அந்த ஒவ்வொரு பெயருடைய சூரியனுக்கும் தனித்தனி குணாதிசயங்கள்/காரகங்கள் உண்டு

மேற்படி குணாதிசய /காரகங்களையும் ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ள காலத்தில் சூரியன் செயல்படுத்துவார்/தருவார்.
அதாவது ஆறு ருதுக்களின் காலத்தின் அடிப்படையில் தனது பன்னிரண்டு விதமான பலன்களை சூரியன் வெளிப்படுத்துவார் என்பதே காலம் அறிந்து சொல்லல் என்பது.

தேசம்:
தேசம் என்ற சொல்லுக்கு இடம் என்றும் ராசி என்றும் பொருள். பழங்கால இந்தியா 56 தேசங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு தேசமும் கோள்களின் இணைவுகளால் ஆனவை.இதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள பழங்கால நூலான வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதை மற்றும் வீமகவி சினேந்திரமாலை சூடாமணி உள்ளமுடையான் போன்ற நூல்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆக எந்த தேசத்தில் எந்த கோளின் ஆதிக்கம் அல்லது கோள்களின் ஆதிக்கம் மிகுந்துள்ளது என்பதை அறிந்து அவற்றின் காரகங்களின் தன்மையின் அடிப்படையில் பலன்களை சொல்ல வேண்டும் என்பதே தேசத்தின் முக்கியத்துமாகும்.

வர்த்தமானம்:
ஒவ்வொரு தேசத்திலும் வாழும் மக்களிடமும் ஆங்காங்கே உள்ள கோள்களின் ஆதிக்கத்தின் தன்மையில் சடங்குகள் சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் போன்றவை நடைமுறையில் இருக்கும்.அவற்றை நன்கு அறிந்து அவற்றின் அடிப்படையிலேயே பலன்கள் சொல்லப்பட வேண்டும்.

யுக்தி:
எந்தவொரு விஷயத்தையும் அணுக யுக்தி வேண்டும். யுக்தி நான்கு வகைப்படும். சாம தான பேத தண்ட என நால்வகை யுக்திகளை கொண்டே எந்தவொரு விஷயமும் அணுகப்படும்

ஒருவரை போற்றுதல் செய்வது சாம யுக்தி

போற்றுதலுக்கு மயங்காதவரை தான யுக்தி அதாவது பொருளை கொடுத்து சரிசெய்தல். இது இரண்டாவது யுக்தி

தானத்துக்கும் மயங்காதவரை பேத யுக்தி கொண்டு பலவீனப்படுத்துதல்.அதாவது அவரது பலவீனங்களை அறிந்து அவரின் பலத்தை குறைத்தல்

பேதயுக்திக்கும் கட்டுப்படாதவரை தண்டயுக்தி கொண்டு சரி செய்தல்.அதாவது மந்திர தந்திரங்கள் பலப்பிரயோகம் செய்தல்.

இந்த நான்கு விதமான யுக்திகளையும் ஒரு ஜோதிடர் அறிந்து இருக்க வேண்டும்.

ச்ருதி:
வேதங்கள் புராணங்கள் இவற்றில் சொல்லப்பட்டவை அதாவது மூலநூல்களில் சொல்லப்பட்டவையெல்லாம் ச்ருதி எனப்படும்.
இவற்றை ஒரு ஜோதிடர் நன்கு கற்று அறிந்து இருக்கவேண்டும்

ஸ்மிருதி:
ச்ருதிகளில் சொல்லப்பட்டனவற்றுக்கு வியாக்கியானங்கள் பாஷ்யங்கள் அதாவது உரைகள் பல ஆச்சாரியார்களால் சொல்லப்பட்டு அவை மக்கள் அனுசரிக்க தர்மசாஸ்திரங்களாக கூறப்பட்டு இருக்கும்
இவற்றையும் ஜோதிடர் நன்கு அறிந்து அவை பயன்பாட்டில் உள்ள இடங்களுக்கு ஏற்ப பலன்களை சொல்ல வேண்டும்

நிறபேதம்:
கோள்கள் ராசிகளில் சஞ்சரிக்கும்போது சுவர்ணமூர்த்தி(பொன்னிறம்) ரஜதமூர்த்தி(வெள்ளி நிறம்) தாமிரமூர்த்தி(பித்தளை நிறம்) இரும்புமூர்த்தி(கருப்பு நிறம்) என நான்குவிதமான நிறபேதங்களை அடைவார்கள். இவற்றின் அடிப்படையிலும் ஜோதிடர் பலன்களை வகுத்து உரைக்க வேண்டும்.

ஆக காலதேசவர்த்தமான யுக்தி ச்ருதி ஸ்மிருதி நிறபேதம் என்பது ஜோதிட பலன் உரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது


Check our New Website http://astroanswers.net/
Here is list of the most interesting videos of Astro Answers :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? https://youtu.be/VN7kETU2b_k
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? https://youtu.be/piECDXHkj94
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? https://youtu.be/VcwMCMFGF4U
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac https://youtu.be/_cwqN5rNzj0

உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara https://youtu.be/cA5blvPrpFM

லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? https://youtu.be/YkCHHm-4RAc

லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
https://youtu.be/G4wTn5aAbj8

இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac https://youtu.be/6I_qNYKc7xk

கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa https://youtu.be/O00UkByk00Q

குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam https://youtu.be/F1R2mBDHLnc

ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage https://youtu.be/hyi_j-fQvxg

திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology https://youtu.be/gjTOhUXafno

நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? https://youtu.be/hgze7-lccjA

My Website https://www.myastromani.com/
Follow Us On Social Medias :
Facebook: https://www.facebook.com/myastromani
instagram: https://www.instagram.com/myastromani/
Twitter: https://twitter.com/myastromani

#astroanswers #astromani
Category
Videos
Be the first to comment